மழைநீரில் மூழ்கிய ஆரம்ப சுகாதார நிலையம்! நோயாளிகள், கர்ப்பினிகள் கடும் அவதி..
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி மாநகரில் நேற்று மாலை திடீர் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கனமழை காரணமாக பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. மருத்துவமனை உட்பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் சிகிச்சையில் இருந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்றவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே பாதுகாப்பாக மீட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் மாநகராட்சியில் இருந்து மோட்டார் மூலம் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் லாரி மருத்துவமனை வாசலில் ஒரு பக்க சக்கரம் பதிந்து சாய்ந்து விட்டதால் மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில் மழைநீர் வெளியேற்றப்படாததால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பலகை, மேஜை உதவியுடன் பெரும் பாடுபட்டு வர வேண்டியுள்ளதால் இது குறித்து மாநகராட்சி விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.