திருத்தணி முருகன் கோயிலில் களைக்கட்டிய தைப்பூச திருவிழா.. அலைமோதிய மக்கள் கூட்டம்! - தைப்பூசம் 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jan 25, 2024, 4:56 PM IST
திருவள்ளூர்: முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளுள் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் இன்று (ஜன.25) தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையில் 4 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்குப் பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்யப்பட்டது. காலை 9 மணிக்குக் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.
தைப்பூச விழாவையொட்டி தமிழகம் மட்டுமில்லாமல், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு மாலை அணிந்தும், விரதம் இருந்தும் காவடி எடுத்து வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
விழாவை ஒட்டி காவல்துறை கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோயில் மாட வீதியில் குதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.