வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா; மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த அம்மனை மனமுருகி வழிபட்ட பக்தர்கள்! - Thanjavur Periya Kovil - THANJAVUR PERIYA KOVIL
🎬 Watch Now: Feature Video
Published : Jul 16, 2024, 7:31 AM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி பெருவிழா (ASHADHA NAVRATRI FESTIVAL) பெரிய கோயிலில் கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தினமும் பல்வேறு அலங்காரமும் நடைபெற்றது. அதில் இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனிவகை அலங்காரம், காய்கறி அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் நேற்று விழா நிறைவு பெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று ஸ்ரீ மகா வாராஹி அம்மனுக்கு மல்லிகை, முல்லை, ரோஜாப்பூ, செவ்வந்தி, தாமரை, தாழம்பூ உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.