தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்; தேரை வடம் பிடித்து இழுத்த ஏராளமான பக்தர்கள் - chithirai chariot festival - CHITHIRAI CHARIOT FESTIVAL

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 10:34 AM IST

தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில், கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இவ்விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த சித்திரை திருவிழாவில், தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அதிகாலை பெரிய கோயிலிருந்து விநாயகர், வள்ளி தெய்வானை, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நீலோத்பலாம்பாள், தியாகராஜர், கந்தர், கமலாம்பாள் ஆகிய சுவாமிகள், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று தேரடியை வந்தடைந்தது.

பின்னர், தியாகராஜர் - கமலாம்பாள் சுவாமிகள் தேரில் எழுந்தருளிய நிலையில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, மங்கல இசைக்கருவிகள் முழங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்தேரினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தேரோட்டம் தஞ்சை நகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்து, தேரடியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.