தண்டு மாரியம்மன் கோயில் கம்பத்துக்கு பெண்கள் மஞ்சள் பூசி வழிபாடு.. - Thandu mariamman temple - THANDU MARIAMMAN TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Apr 20, 2024, 12:26 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் புகழ்பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் 'குண்டம் விழா' பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, இக்கோயிலில் மிகப்பெரிய கம்பம் நடுவதற்கு, கடம்பூர் மலைப்பகுதி கோட்டமாளத்தில் இருந்து ஆலமரம் வெட்டப்பட்டு லாரியில் கொண்டுவரப்பட்டது.
பின்னர், அந்த ஆலமரம் கம்பத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டு, பவானி ஆற்றில் பூஜைகள் செய்து மீண்டும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு கோயில் முன்பாக நடப்பட்டது. இந்நிலையில், தண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையானது நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. பின்னர், கோயிலின் முன்பு நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் புனிதநீர் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனர்.
இந்த விழாவையொட்டி, கனி அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து, கம்பத்தை சுற்றி இளைஞர்கள் பாரம்பரிய கம்பத்தாட்டம் ஆடி மகிழ்ந்தனர். கொங்கு மண்டலத்தில் 12 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பெரிய கம்பத்தை இங்கு நட்டு, 18 சமுதாய இன மக்கள் ஒற்றிணைந்து விழா நடத்துவதால், 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் பங்கேற்பர். இந்நிலையில், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அம்மன் அழைப்பு, 24ஆம் தேதி குண்டம் மற்றும் 25ஆம் தேதி மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.