40க்கு 40 வெல்லப்போவது யார்? நேரடி களத்தில் ஈடிவி பாரத்! - Lok Sabha election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jun 4, 2024, 7:52 AM IST
சென்னை: 18வது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சற்று நேரத்தில் துவங்க உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 543 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை துல்லியமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்தும் நேரடி கள நிலவரங்களையும், முன்னிலை நிலவரங்களையும் ஈடிவி பாரத் செய்தியாளர்கள் வழங்கி வருகின்றனர். ரிசல்ட் அப்டேஷன் டீம் என்ற குழு ஐதராபாத் தலைமை அலுவலகத்திலிருந்து தேர்தல் முடிவுகளை ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது. துல்லியமான தேர்தல் முடிவுகளை நொடிக்கு நொடி ஈடிவி பாரத் வழங்கி வருகிறது. குழப்பமில்லா, துல்லியமான தேர்தல் முடிவுகளை அறிய இணைந்திருங்கள் ஈடிவி பாரத் உடன்.. https://www.etvbharat.com/ta/!elections/lok-sabha-election-results-2024