LIVE: சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா: தேசியக்கொடி ஏற்றி வைத்து விருது வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! - independence day Chennai live - INDEPENDENCE DAY CHENNAI LIVE
🎬 Watch Now: Feature Video


Published : Aug 15, 2024, 8:47 AM IST
சென்னை: புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பிறகு பல்வேறு துறை சார்ந்த விருதுகளை வழங்கி வருகிறார். அதன் நேரலை காட்சிகள்.. நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, காவல் துறையின் பல்வேறு பிரிவினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசின் சார்பில் இந்தாண்டு தகைசால் தமிழர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான குமரி அனந்தனுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது. மேலும், துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, சமூக நலன் மற்றும் மகத்தான சேவைக்கான விருது, சிறப்பாக செயல்படும் 3 அரசுத் துறைகளுக்கு முதல்வரின் நல்லாட்சி விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர், நிறுவனம், சமூக சேவகர், கூட்டுறவு வங்கிக்கான விருதுகள், சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளையும் சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் 50வது ஆண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.