தமிழக முதலமைச்சரின் "தென் திசையின் தீர்ப்பு" நூல் வெளியீட்டு விழா - நேரலை! - MK Stalin Book release event - MK STALIN BOOK RELEASE EVENT
🎬 Watch Now: Feature Video
Published : Aug 16, 2024, 10:36 AM IST
சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "நாடாளுமன்ற தேர்தல்-2024 - தென் திசையின் தீர்ப்பு" என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி பெற்றுக் கொள்கிறார். அதன் நேரடி காட்சிகளை இங்கே காணலாம். அந்த புத்தகத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றியை திமுக கூட்டணி எப்படி சாத்தியமாக்கியது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம் என்னென்ன? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், புள்ளி விவரங்கள், இன்ஃபோகிராபிக் என விரிவாக பதிவு செய்யும் நூலாக இந்த 'தென் திசையின் தீர்ப்பு' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். இதில், திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியமான மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 27ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளநிலையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.