நெல்லை பஸ் ஸ்டாண்டில் அசால்டாக பைக் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! - Bike theft in Nellai Bus stand - BIKE THEFT IN NELLAI BUS STAND
🎬 Watch Now: Feature Video


Published : May 25, 2024, 4:55 PM IST
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (45). இவர் கடைகளுக்கு பொருள்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு பொருள்களை விநியோகம் செய்வதற்காக, தனது பைக்கை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியேறும் பகுதியில் நிறுத்திவிட்டு, பொருட்களை விநியோகிக்க பேருந்து நிலையத்திற்குள் சென்றுள்ளார்.
பொருட்களை விநியோகம் செய்துவிட்டு வெளியே வந்து பைக் இருக்கும் இடத்தை பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் அங்கு இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பைக்கில் சைடு லாக் போடாமல் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தான், சைடு லாக் போடாமல் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர், மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது இது தொடர்பான சிசிசிடிவி காட்சிகள் வெளியாகி நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.