கும்பகோணத்தில் மாநில அளவிலான உண்டி கோல் போட்டி - State Level level undi kol Sport

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 3:03 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று (ஜன.20) நடந்த மாநில அளவிலான உண்டி கோல் போட்டியில் பங்கேற்ற 11 பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கிராமங்களில் சிறுவர்கள் விளையாட்டாகவும் நம் முன்னோர்கள் காட்டில் தற்காப்பிற்காகவும், வேட்டையாடவும் உபயோகித்த கவண் (எ) உண்டிக் கோல் விளையாட்டு போட்டி மாநில அளவில் நேற்று நடைபெற்றது. உண்டி கோல் என்ற போட்டியானது மாணவ மாணவியர்களை படிப்பில் மற்றும் அல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளை உற்றுநோக்கும் திறனை வளர்க்கும் ஒரு கருவியாக உள்ளது. ஒரு பொருளைக் குறிவைத்து அடிப்பதன் மூலம் மாணவ மாணவியர்களின் நினைவு திறன் மற்றும் மனதை ஒருமுகப்படுத்துதல் சாத்தியமாகிறது.

இவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் மாணவ மாணவியர்கள் படிப்பில் மட்டுமில்லாமல், தான் செய்யும் செயலில் அதிகம் கவனத்தோடு செயல்பட முடியும் என்ற உயரிய சிந்தனையில், இப்போட்டியை பள்ளி நிறுவன தலைவர் எஸ் கார்த்திகேயன் தலைமையேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், உண்டி கோல் விளையாடுவதின் நோக்கம் மற்றும் சிறப்புகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 பள்ளியில் இருந்து வருகை தந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஐந்து முறைகள் வழங்கப்பட்டன. ஐந்து முறைகளில் அதிக முறை வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவதாக வந்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், மூன்றாவதாக இடம் பெற்றவர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டன. இதில் பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா தலைமை ஆசிரியர் அம்பிகாபதி, மற்றும் ஆசிரிய பெருமக்கள், சக மாணவ மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இப்போட்டியில் கலந்து கொண்டு அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. படிப்பில் மட்டுமன்றி பிற கலைகளிலும் விளையாட்டுத்துறையிலும் சாதனைகள் புரிய மாணவ மாணவியர்களை தயார் செய்வதால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.