LIVE: தமிழகத்தில் பாஜக கூட்டணி தோல்வி.. அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு! - TN BJP President Annamalai Press Meet - TN BJP PRESIDENT ANNAMALAI PRESS MEET
🎬 Watch Now: Feature Video
Published : Jun 5, 2024, 4:18 PM IST
|Updated : Jun 5, 2024, 4:59 PM IST
சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜீன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணியானது நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என மூன்று மிகப்பெரிய கூட்டணிகள் தமிழகத்தில் போட்டியிட்டன. நேற்று வெளிவந்த முடிவின் படி இந்தியா முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக பெரும்பான்மை பெற்று இருந்தாலும், தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இது தொடர்பாக தற்போது அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அதன் நேரடி காட்சிகளைக் காணலாம்..
Last Updated : Jun 5, 2024, 4:59 PM IST