தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: வேலூர் வள்ளிமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்... - vallimalai murugan temple - VALLIMALAI MURUGAN TEMPLE
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-04-2024/640-480-21220722-thumbnail-16x9-vlr.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Apr 14, 2024, 3:45 PM IST
வேலூர்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூரில் வெள்ளிக்கவசத்தில் ஜொலிக்கும் வள்ளிமலை முருகப்பெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி முருகப்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அலங்காரத்தில் இருக்கும் முருகப்பெருமானைத் தரிசனம் செய்யப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். காலை முதல் இரவு கோயில் நடை சாத்தும் வரை பால், பன்னீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடை பெற்று மற்றும் புத்தாண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது. சித்திரை மாதம் என்பதால் காலை 4 மணிக்கு நடையானது திறக்கப்பட்டு மூலவர்களுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்தப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் மூலவரை வழிபட்டு வருகின்றனர்.