காசு கொடுத்து வாங்கிய சாப்பாட்டில் கரப்பான் பூச்சி.. அலட்சியமாக பதிலளித்த உரிமையாளர்! - tiruvannamalai - TIRUVANNAMALAI
🎬 Watch Now: Feature Video
Published : Aug 6, 2024, 7:38 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டு வகையான உணவுகளும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று செங்கம் நாச்சிபட்டுப் பகுதியைச் சேர்ந்த 5 பேர் அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, குணசேகரன் என்பவருக்கு பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளரிடம் கரப்பான் பூச்சிகள் இறந்து கிடப்பது குறித்து கேட்டதற்கு "நீ சாப்பிட்ட இலையில் இருந்ததா? அருகிலிருந்தவர் இலையில்தானே உள்ளது" என அலட்சியமாக பதில் அளித்துள்ளதாகக் கூறப்படிகிறது. மேலும், அதனால் உடன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு ஒரு விதமான ஒவ்வாமையை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் உணவகத்தில் நடந்த அனைத்தையும் ஒருவர் வீடியோவாக எடுத்து, அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து குணசேகரன் கூறுகையில், "உண்ணக்கூடிய உணவை தரமற்ற முறையில் தயாரித்த உணவகத்தின் மீதும், அலட்சியமாகப் பதிலளித்த உரிமையாளர் மீதும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.