விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு துறையினர் தரும் டிப்ஸ்!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 23, 2024, 4:46 PM IST
தஞ்சாவூர்: இந்தியா முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவது எப்படி? என அந்தந்த மாவட்டங்களில் உள்ள தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் செட்டிமண்டபம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது எப்படி? தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கும்பகோணம் நிலைய அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையிலான வீரர்கள், அனைவரும் பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்பது , எதிர்பாரத விதமாக தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும் கோயில்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளைக் கூறியதுடன், அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதற்கிடையே மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.