ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வ நிகழ்வு: திருவண்ணாமலை கிரிவலப் பாதை கோயிலில் குவிந்த பக்தர்கள்! - sunlight falling on Shiva Lingam - SUNLIGHT FALLING ON SHIVA LINGAM
🎬 Watch Now: Feature Video
Published : Apr 14, 2024, 4:37 PM IST
திருவண்ணாமலை: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடிய சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் இன்று (ஏப்.14) நிகழ்ந்துள்ளது.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது, திருநேர் அண்ணாமலையார் கோயில்.
இன்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மேலும் இந்த கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய சிவலிங்கத்தின் மீது சூரிய ஒலி படும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது. இதற்காக இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலை அலங்காரம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சரியாகக் காலை 7 மணியளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடிய சிவலிங்கம் அமைந்துள்ள மூலவர் மீது சூரிய ஒலி படும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களும் முழங்க மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.