பலசரக்கு வாங்கச் சென்ற இளைஞர் தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! - NAMAKKAL ACCIDENT - NAMAKKAL ACCIDENT
🎬 Watch Now: Feature Video
Published : Jul 19, 2024, 3:04 PM IST
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனூர் பகுதியைச் சார்ந்தவர் சதீஷ்குமார். இவர் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் சாயத் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால், வீட்டில் இருந்த இவர் இருசக்கர வாகனத்தின் மூலம் அருகில் இருந்த மளிகை கடைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் மளிகைப் பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், இவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், சதீஷ்குமார் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சதீஷ்குமார் மீது பேருந்து மோதும் காட்சி அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.