"இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்" - பாலம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்த கிராம மக்கள்! - DINDIGUL DISTRICT
🎬 Watch Now: Feature Video
Published : Nov 2, 2024, 11:54 AM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராப்பட்டியில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊருக்கு அருகே உள்ள திருமணிமுத்தாற்றின் கரையில் இந்த ஊர்மக்களுக்கான இடுகாடு அமைந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருமணிமுத்தாற்றில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தகைய சூழலில், சமுத்திரப்பட்டியைச் சேர்ந்த பெரியாம்பிள்ளை என்பவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றபோது திருமணிமுத்தாற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இறந்தவர் உடலை ஆற்றில் இடுப்பளவுக்கு மேல் சென்ற தண்ணீரில் ஆபத்தான முறையில் தலைக்கு மேல் வைத்து சுமந்து சென்று இடுகாட்டில் வைத்து அடக்கம் செய்தனர்.
இத்தகைய சூழ்நிலையில், "தொடர்ச்சியாக மழைக்காலங்களில் இறந்தவர் உடலை இது போன்ற நிலையில்தான் ஆற்றைக் கடந்து அடக்கம் செய்து வருகிறோம். எனவே, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருமணிமுத்தாற்றில் பாலம் அமைத்து தர வேண்டும்" என்று அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.