களைகட்டிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு; குவியும் பொதுமக்கள்! - Palani Muthamil Murugan Conference
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இரு தினங்கள் நடைபெற்று நேற்று (ஆகஸ்ட் 25) நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த வேல் அரங்கம், 3d திரையரங்கு, VR தொழில்நுட்பத்தில் அறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் நிகழ்வு, புத்தக கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது.
இந்த மாநாடு முடிந்தும் வருகிற 30ஆம் தேதி வரை கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். மாநாடு நடைபெற்ற போது கூட்ட நெரிசல் காரணமாக பலரும் கண்காட்சியை முழுமையாக காண முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக இன்று வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஏராளமானோர் பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள 3D திரையரங்கு மற்றும் அறுபடை வீடுகளை நேரில் பார்ப்பது போல உணர்வதாக கண்காட்சியை பார்த்து விட்டு வந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.