மெய் மறந்து செல்போன் உபயோகித்த அதிகாரிகள்... சேர் இல்லையென சேர்மன் வாக்குவாதம்: வேலூர் ஆய்வுக்கூட்டத்தில் தொடர் சலசலப்பு! - வேலூரில் ஆய்வுக்கூட்டம்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 30, 2024, 9:50 AM IST
வேலூர்: வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக் கூட்டம் தலைவர் க.அன்பழகன் தலைமையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக்குப் பிறகு சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று (ஜன.29) நடைபெற்றது.
அப்போது ஒரு மாவட்டத்தின் மேம்பாட்டிற்காக நடைபெறும் சட்டமன்ற ஆய்வுக் கூட்டத்தையே மறந்து, அங்கிருந்த அரசு அதிகாரிகள் சிலர் செல்போனில் பேசிக்கொண்டும், இணையதளத்தில் ரீல்ஸ்களை பார்த்தபடியும் மெய்மறந்து தங்களது நேரத்தை செல்போனில் செலவழித்துக் கொண்டிருந்தனர். அரசு அதிகாரிகளின் கூட்டத்தில் இதுபோன்று கவனக் குறைவாக இருந்த இந்த சம்பவம் அவையில் இருந்தோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கூட்ட துவக்கத்தில் வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் ஒரு சிலருக்கு புதிய இருக்கை அளிக்கப்படவில்லை என கே.வி.குப்பத்தை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் அவர்களுக்கு இருக்கை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். மேலும், வேலூர் மாவட்டத்தில் ஆட்சியராக சுப்புலட்சுமி ஐஏஎஸ் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அவையில் சலசலப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.