Live: ராமநாதபுரத்தில் சீமான் தேர்தல் பரப்புரை! - ntk Seeman election campaign - NTK SEEMAN ELECTION CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
Published : Mar 30, 2024, 8:24 PM IST
|Updated : Mar 30, 2024, 8:49 PM IST
ராமநாதபுரம்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடனை பகுதியில் ராமநாதபுர மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபாலை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நேரலை காட்சிகள்.. இன்று காலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகிலும், மாலை அரண்மனை அருகிலும் ராமநாதபுர மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபாலை ஆதரித்து வாகன பரப்புரை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, தற்போது ராமநாதபுரம் தொண்டி, திருவாடனை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மேலும், நாம் தமிழர் கட்சி 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என சீமான் ஏற்கனவே அறிவித்து இருந்தார். முன்னதாக, சீமானின் நாம் தமிழர் கட்சி இதுவரை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகத்தைச் சேர்ந்த வேறொரு கட்சிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சின்னங்களில் மைக் சின்னம் தற்போது ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Mar 30, 2024, 8:49 PM IST