Live: ஈரோடு, நாமக்கல், கரூர் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்! - MK Stalin Erode Campaign - MK STALIN ERODE CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
Published : Mar 31, 2024, 7:21 PM IST
|Updated : Mar 31, 2024, 7:55 PM IST
ஈரோடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று (மார்ச் 31) ஈரோடு மாவட்டம், சோலார் அடுத்துள்ள சின்னியம்பாளையத்தில் ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நேரலை காட்சிகள்...பாசிசத்தை வீழ்த்த இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்னும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்தும், நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் களம் காணும் மாதேஸ்வரனை ஆதரித்தும், கரூர் தொகுதியில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஜோதிமணியை ஆதரித்தும் சிறப்புரையாற்றுகிறார். இன்று காலை ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, நேற்றைய தினம் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Last Updated : Mar 31, 2024, 7:55 PM IST