நீண்ட வரிசையில் காத்து இருந்து வாக்களித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ! - Lok Sabha Election 2024
🎬 Watch Now: Feature Video
தென்காசி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 1743 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் முதல் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் நான்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.
தென்காசி மாவட்டம் முழுவதும் காலை முதலே முதல் தலைமுறை வாக்காளர்களின் வருகையும் அதிகமாகவே காணப்பட்டது. குறிப்பாக ஒரு சில இடங்களில் பெண்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் காலை 11 மணி நிலவரப்படி தென்காசி மாவட்டத்தில் 24.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.