திடீரென வேப்பமரத்தில் வந்த பால்.. கோயில் கட்ட சொல்லி சாமியாடிய பெண்.. மயிலாடுதுறையில் பரபரப்பு! - Mayiladuthurai Milk from neem tree
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை கிராமத்தில் ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயில் மேலவீதி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான வயலுடன் கூடிய தோப்புக்குள் உள்ளது. இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில், பெண்கள் கன்னி வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தோப்பில் உள்ள 20 அடி உயர வேப்பமரத்தில், திடீரென பால் வடிந்துள்ளது. இதனைப் பார்த்த பெண்கள் பக்தி பரவசத்துடன் வேப்பமரத்தினை வணங்கினர். மேலும், வேப்பமரத்தில் பால் வடிவது, காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, ஏராளமான பெண்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
பின் கிராம மக்கள் ஒன்றிணைந்து, வேப்ப மரத்திற்கு குங்குமம், மஞ்சள் பூசி, பூக்களிட்டு, சூடம் ஏற்றி மண்டியிட்டு வணங்கி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, வேப்பமரத்தில் நுரையுடன் பால் வடிந்து கொண்டே இருக்கும் நிகழ்வை பார்ப்பதற்காக ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். அதில் பெண் ஒருவர் பக்தி பரவசத்தில் சாமியாடி, அங்கு கோயில் கட்ட வேண்டும் என்று அருள்வாக்கு சொன்ன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.