LIVE: சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு! - pm modi attends bjp public meeting
🎬 Watch Now: Feature Video
Published : Mar 19, 2024, 1:05 PM IST
|Updated : Mar 19, 2024, 2:26 PM IST
சேலம்: கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜக சார்பில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன் நேரலை காட்சிகள்..நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டனர். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து அனல் பறக்கும் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகைத் தந்துள்ளார். ஏற்கனவே திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நிலையில், நேற்று மீண்டும் கோவை வந்து பிரம்மாண்ட வாகன பேரணியை நடத்தினர். இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு சென்று அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மதியம் சேலம் திரும்பி இங்கு மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு, சரத்குமார் உள்ளிட்டோருடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Last Updated : Mar 19, 2024, 2:26 PM IST