தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: சட்டப்பேரவை நேரலை காட்சிகள்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 20, 2024, 9:44 AM IST
|Updated : Feb 20, 2024, 12:04 PM IST
சென்னை: நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2024 - 2025ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 4வது முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அதை நேரலை காட்சிகளை பார்த்து வருகிறோம்.
இந்த வேளாண் பட்ஜெட்டில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் திட்டங்கள், பால்வளம், கூட்டுறவு மற்றும் உணவுத்துறைகள், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் தொடர்பான திட்டங்கள் மற்றும் நெற்பயிர்களுக்கான் குறைந்த பட்ட ஆதார விலை, விவசாய மேலாண்மை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரிரு மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகளை கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2023-24 நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முன்னதாக, 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் 7 அம்சங்களில் பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.