கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்த எல்.முருகன்! - L Murugan Playing Cricket - L MURUGAN PLAYING CRICKET
🎬 Watch Now: Feature Video
Published : Mar 31, 2024, 10:03 PM IST
நீலகிரி: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து, தேர்தல் களத்தில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு, தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், நீலகிரி மக்களவை தொகுதியில் வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற பொழுது, மஞ்சூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், வேட்பாளர் எல்.முருகனை கிரிக்கெட் விளையாட அழைத்துள்ளனர்.
இதனை அடுத்து, இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய எல்.முருகன், இளைஞர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும், அந்த இளைஞர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில், தேர்தல் பரப்புரையின்போது எல்.முருகன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.