காட்டூர் அரசு பள்ளி விழாவில் கருப்பசாமி நடனமாடிய மாணவர்களின் வீடியோ வைரல்! - பள்ளி மாணவர்களின் கருப்பசாமி நடனம்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 21, 2024, 1:04 PM IST
திருவாரூர்: காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அரக்கேரியது. அப்போது, அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் மதுரை வீரர், கருப்பசாமி போன்ற கிராமிய தெய்வங்களின் வேடம் அணிந்து நடனமாடினர்.அப்போது, மதுரை வீரன் வேடம் அணிந்து வந்த அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சபரிஷ் எனும் மாணவன், மாணவர்களின் கூட்டத்திற்கு நடுவே நடந்து சென்று மேடையேறி பக்தி பாடல்களுக்கு நடனமாடினார். அதேபோல், தீரன் எனும் ஏழாம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வேடமணிந்து பக்தி பாடல்களுக்கு ஆவேசமாக நடனமாடினார்.கிராமிய தெய்வங்களான மதுரை வீரன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட வேடமணிந்து, பக்தி பாடல்களுக்கு ஆவேச நடனமாடினர். அதனைக் கண்டு பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பார்வையாளர்கள் திகைத்தனர். குறிப்பாக, தெய்வங்களின் வேடம் அணிந்து மாணவர்களின் ஆடிய ஆவேச நடனத்தின் போது, சில மாணவிகள் அருள் வந்து ஆடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.