LIVE: பாரத் ஜோடோ நியாய யாத்ரா இறுதி நிகழ்வு நேரலை! - bharat jodo nyay yatra final event
🎬 Watch Now: Feature Video
Published : Mar 17, 2024, 7:15 PM IST
|Updated : Mar 17, 2024, 8:00 PM IST
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட யாத்திரையான “ஒற்றுமை நீதி யாத்திரை” (bharat jodo nyay yatra), கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. மணிப்பூர் மாநிலத்திலிருந்து தொடங்கிய இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் வழியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று நிறைவு பெறுகிறது.இதற்காக, இன்று மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் இந்த யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பை சென்றுள்ளனர். இதன் நேரலைக் காட்சிகள்..
Last Updated : Mar 17, 2024, 8:00 PM IST