ஸ்ஸப்பா என்னா காத்தோட்டம்... வால்பாறையில் ரிலாக்ஸாக தூங்கும் யானைக் கூட்டம்! - valparai sleeping elephant - VALPARAI SLEEPING ELEPHANT
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-05-2024/640-480-21482461-thumbnail-16x9-ele.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 16, 2024, 3:34 PM IST
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உடுமலை, டாப்ஸ்லிப் வால்பாறை, மானம்பள்ளி என ஆறு வனசரகங்கள் 960 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளன. இங்கு யானை, கரடி சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புள்ளிமான், கடமான், செந்நாய் மற்றும் அபூர்வ பறவைகள் தாவரங்கள் ஏராளமாக உள்ளன. மத்திய அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இங்கு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் நவமலை, டாப்ஸ்லிப், சோலையார் டேம், சிறு குன்றா, முடீஸ், அக்கா மலை, பெரிய கல்லார், சின்னக்கல்லார், நீராறு அணை, மானம் பள்ளி மற்றும் பல பகுதிகளில் காட்டு யானை நடமாட்டங்கள் அதிக அளவில் உள்ளது. இதை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. வனத்துறையினர் அடர் வனப்பகுதியில் ரோந்து பணிக்கு செல்லும்போது குட்டியுடன் யானை கூட்டம் தூங்குவதை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.