நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தால் பெண்கள் அவதி.. வீடியோ வைரல்! - Attur government bus issue
🎬 Watch Now: Feature Video
Published : May 11, 2024, 3:36 PM IST
திண்டுக்கல்: ஆத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் பெண் பயணிகளை ஓடவிட்ட ஓட்டுநரின் அவல செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பை திமுக வெளியிட்டது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்றவுடன் திட்டத்தை அமல் படுத்தியது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு இருக்கைகளில் இடம் கொடுக்காமல் வருவது, சரியான நிறுத்தத்தில் அவர்களை இறக்கி விடாமல் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கின்றன. இது தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் இந்த நிலை தொடர்கிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில், ஆத்தூர் வண்டி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் 9f எனும் அரசு பேருந்து மதியம் 1.20 மணிக்குப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை ஏற்றாமல், பெண் பயணிகளைப் பேருந்துக்குப் பின்னால் ஓடவிட்ட அவல நிலை நிகழ்ந்துள்ளது.
பெண் பயணிகளைப் பேருந்தில் ஏற்றாமல் பேருந்துக்குப்பின் ஓட விட்ட இந்த ஓட்டுநரின் இழிவான செயலை பலரும் கண்டிக்கின்றனர். மேலும் ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.