ஆம்பூரில் டீக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து! - ambur fire accident - AMBUR FIRE ACCIDENT
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-07-2024/640-480-21939888-thumbnail-16x9-tpt.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jul 13, 2024, 2:17 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் ஆம்பூர் புறவழிச்சாலையில், அமுதீசர் என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், டீக்கடைக்கான குடோன், அருகில் உள்ள மணி என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில், இன்று காலை 9 மணியளவில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் குடோனில் இருந்த உணவு பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்துள்ளது.
இதனை அடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், குடோனில் பற்றிய தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதனைத் தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.