பரளிபுதூர் சுங்கச்சாவடியை சூறையாடிய கும்பல்.. அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்! - Paralipudur tollgate
🎬 Watch Now: Feature Video
Published : Mar 7, 2024, 3:47 PM IST
திண்டுக்கல்: பரளிபுதூர் பகுதியில் மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் அருகே உள்ள வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த கழிவுநீர் வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் வாக்குவாதம் முற்றியதில், கோபம் அடைந்த கழிவுநீர் வாகன ஓட்டுநர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட கும்பலுடன் வந்து, சுங்கச்சாவடியின் நடுபாதையில் இருசக்கர வாகனத்தை நிறுத்த மற்ற வாகனங்களை செல்ல விடாமல் மறித்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், சுங்கச்சாவடியில் இருந்த கேமராக்கள், தடுப்புகள், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.