நீலகிரியில் இன்று முதல் வரையாடு கணக்கெடுப்பு தொடக்கம்! - Nilgiri tahr Survey - NILGIRI TAHR SURVEY

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 11:06 AM IST

நீலகிரி: தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மே 1ஆம் தேதி வரை 3 நாள்கள் நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளது என முதுமலை புலிகள் காப்பக முக்குருத்தி வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை (First Nilgiri tahr Project in India) மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் வரையாடுகளின் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, அவற்றின் வாழ்விடங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகள் வனத்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா துணை இயக்குநர், சி.வித்யா ஐஎப்எஸ் உத்தரவுபடி, இன்று முதல் மே 1ஆம் தேதி வரை மூன்று நாட்களில், ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, முக்குருத்தி வனச்சரக அலுவலர் தலைமையிலான வனப்பணியளர்கள், நீலகிரி வரையாடு திட்ட மூத்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பக புலிகள் வன சிறப்பு இலக்கு படை பணியாளர்கள் உள்ளடக்கிய சுமார் 25 நபர்கள், முக்குருத்தி தேசிய பூங்காவில் இரட்டை பார்வையாளர்கள் முறையில் தேர்வு செய்துள்ள 5 பகுதிகளில், மொத்தம் 10 குழுக்களாக சென்று வரையாடு வாழ்விடங்களான மலை முகடுகள், புல்வெளி மலைகள் மற்றும் நீர் நிலைகளில் வரையாடு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.