கூடலூரில் தொடர் உறைபனி.. கேரள வனப்பகுதியை நோக்கிச் செல்லும் யானைகள்! - Forest Department
🎬 Watch Now: Feature Video
Published : Feb 2, 2024, 3:42 PM IST
|Updated : Feb 6, 2024, 6:52 PM IST
நீலகிரி: கூடலூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக கேரள பகுதியின் பசுமையான காடுகளை நோக்கி நகர்வதாக தமிழ்நாடு வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் 60 சதவீதம் அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் கரடி, சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை பறவை இனங்களும், மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர் உறைபனி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தேயிலைச் செடிகள் மற்றும் மலைத்தோட்ட காய்கறிகள் காய்ந்து கருகியுள்ளன. இதனால், வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பை நோக்கிச் செல்கின்றன. எனவே, வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீரை நிரப்பும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது, கூடலூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டமாக அருகே உள்ள கேரளாவின் ஈரமான மற்றும் பசுமையான காடுகளை நோக்கி நகர்வதாக, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.