மீண்டும் மீண்டும் வருவேன்! இது ஏன் ரோடு! ஏன் ஊரு! சாலை வழி ஊருக்குள் வரும் காட்டு யானை! - Tirupattur elephant enters village - TIRUPATTUR ELEPHANT ENTERS VILLAGE
🎬 Watch Now: Feature Video
Published : Jul 22, 2024, 9:43 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த பனங்காட்டேரி என்னும் மலைகிராமத்தில், ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ளது. கடந்த வாரம் இந்த மலைத்தொடரில் இருந்து, டஸ்கர் என்னும் ஒற்றைகொம்பு உடைய காட்டுயானை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது.
பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டுயானையை வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து 30 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீண்டும் வனப்பகுதியிற்குள் விரட்டினர். இந்நிலையில் அதே ஒற்றைகொம்பு உடைய காட்டுயானை இன்று மீண்டும் ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள பனங்காட்டேரி, மலை பகுதியில் உள்ள நெஞ்சாலையில் உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்களும், அவ்வழியாகச்சென்ற வாகன ஓட்டிகளும், அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து யானை இருக்கும் பகுதிக்கு வந்த வனத்துறையினரும் காவல் துறையினரும் யானையை காட்டுக்குள் விரட்ட போராடி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஒற்றை காட்டுயானை சாலையில் உலாவரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களிங் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்