“ஏன் மோதுற மாதிரி வந்தீங்க?”.. கண்மூடித்தனமாக அடித்த போதை கும்பல்.. திருவாரூரில் பரபரப்பு! - DRUNKEN FIGHT VIRAL VIDEO - DRUNKEN FIGHT VIRAL VIDEO
🎬 Watch Now: Feature Video
Published : Aug 3, 2024, 7:54 PM IST
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியை அடுத்த வடுவூர் என்ற கிராம பகுதியைச் சேர்ந்த ஒருவர், மன்னார்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் தனது மகனை பள்ளி முடிந்து அழைத்துச் செல்வதற்காக, மன்னார்குடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது காலவாய்கரை என்னும் இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட போது, மற்றொரு பைக்கில் மது அருந்திவிட்டு வந்த மூவர் எதிரே வந்த நபரை மோதுவது போல் வந்துள்ளனர்.
இதனால் எதிரே வந்த மன்னார்குடி நபர், ஏன் மூவரும் இப்படி மோதுவதுபோல் வருகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு, அந்த மூவரும் பதில் ஏதும் பேசாமல், திடீரென அருகில் இருந்த கட்டையை எடுத்து, கேள்வி கேட்ட நபரை கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டதையடுத்து, இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.