ஏரியில் கொத்துக் கொத்தாய் செத்து மிதக்கும் மீன்கள்... பொதுமக்கள் அதிர்ச்சி! - Fish dead - FISH DEAD
🎬 Watch Now: Feature Video
Published : Jun 2, 2024, 2:23 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு, கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் வழங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இங்கு மீன்பிடித்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளதால் ஏரியில் உள்ள தண்ணீர் வற்றி அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகின்றது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "வெயிலின் தக்கத்தால் ஏரியில் போதுமான தண்ணீர் இல்லாமல் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.