எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல: முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்! - Lok Sabha elections 2024 - LOK SABHA ELECTIONS 2024
🎬 Watch Now: Feature Video


Published : Apr 4, 2024, 1:09 PM IST
திருநெல்வேலி: நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்காக தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தேர்தல் ஆணையமும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கல்லூரி மாணவ மாணவிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி, சாலை பேரணி, வண்ணக் கோலம் இடுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி முதுகலை பட்டம் பயிலும் மாணவிகள் தங்களது முகத்தில் ஓவியங்கள் வரைந்து தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, மாணவிகள் தங்கள் முகத்தில் மூவர்ண கொடியை ஓவியமாக வரைந்து, அதில் "எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "அனைவரும் வாக்களிக்க வேண்டும்" உள்ளிட்ட வாசகங்கள் எழுதி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, முகத்தில் வரைந்த ஓவியங்களோடு மக்கள் மத்தியில் சென்று தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.