கோவையில் கனமழை..களத்தில் இறங்கி ஆய்வு செய்த ஆட்சியர் கிராந்தி குமார்! - COIMBATORE RAIN
🎬 Watch Now: Feature Video
Published : Oct 14, 2024, 11:55 AM IST
கோயம்புத்தூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதில், ஆவாரம்பாளையம் பட்டாளத்தம்மன் கோயில் வீதியில் உள்ள பள்ளத்தில் இருந்து வெளியேறிய மழைநீர், அப்பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மழை நீர் வீடுகளுக்குள் புகுந்த பகுதிகளை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோர் நேற்று இரவு நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை விரைவு படுத்தினர்.
தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கவும், இப்பகுதியில் மழைநீர் வீதிகளில் புகுக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.