LIVE: செஸ் சாம்பியன் குகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு நேரலை - chess grandmaster d gukesh - CHESS GRANDMASTER D GUKESH
🎬 Watch Now: Feature Video
Published : Apr 25, 2024, 2:59 PM IST
|Updated : Apr 25, 2024, 3:15 PM IST
சென்னை: கனடாவின் டொராண்டோ நகரில் சமீபத்தில் முடிவடைந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகிறார். அதன் நேரலைக் காட்சிகள்..உலகச் செஸ் சாம்பியனுடன் விளையாடப் போகும் வீரரைத் தேர்வு செய்வதற்கான 'பிடே கேண்டிடேட்ஸ்' (FIDE Candidates 2024) சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோண்டோ நகரில் நடைபெற்றது. இதில், 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதில் நடைபெற்ற 14வது சுற்றில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டர். இதில் வெற்றி பெற்றதன் மூலம், இளம் வயதில் (17) 'பிடே கேண்டிடேட் செஸ்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை விரைவில் எதிர்கொள்ள உள்ளார் குகேஷ். அவருக்கு பலரும் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Last Updated : Apr 25, 2024, 3:15 PM IST