LIVE: நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்.. வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பு! - AGNI NAKSHATRAM 2024 - AGNI NAKSHATRAM 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 3, 2024, 3:06 PM IST
|Updated : May 3, 2024, 3:21 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கும் காலம் குறித்து தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அதன் நேரலை..கோடை காலம் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனிடையே, தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும், எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, ஏறத்தாழ 18 மாவட்டங்களில் வெயில் சதமடித்த நிலையில், கரூர் மாவட்டம் பரமத்தியில் 112 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது.தமிழகத்தில் இதுவரை, ஈரோட்டில் 44.0 டிகிரி செல்சியஸ், வேலூரில் 43.6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 42.7 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 42.5 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 42.3 டிகிரி செல்சியஸ், சேலம் மற்றும் திருப்பத்தூரில் 42.2 டிகிரி செல்சியஸ், மதுரை மற்றும் நாமக்கல்லில் 42.0 டிகிரி செல்சியஸ் என 10 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 42 டிகிரி முதல் 44 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Last Updated : May 3, 2024, 3:21 PM IST