சென்னை விமான நிலையத்தில் சிறப்பு காவல் ரோந்து திட்டம் தொடக்கம் - Chennai Airport Police Patrol
🎬 Watch Now: Feature Video
Published : Mar 15, 2024, 8:13 AM IST
சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் சேவை செய்வதற்காகவும், பாதுகாப்பளிக்கவும் (Airport Police-Buddy Patrol) என்ற புதிய சிறப்பு பாதுகாப்பு ரோந்து படையை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று (மார்ச் 15) கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், "சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமானங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, விமான நிலைய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர்(CISF), பிசிஏஎஸ் (BCAS) ஆகியவற்றை இணைத்து, புதிய சிறப்பு பாதுகாப்பு முறை ஒன்றைத் தொடங்கியுள்ளோம்.
விமான நிலையத்தின் வெளி மற்றும் உள்பகுதியில் பயணிகளுக்கும், பணியாளர்களுக்கும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்ய இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீர் செய்யவும், இக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் பல நாட்டினர் வருவதால் இந்த குழுவில் உள்ள காவலர்கள் பல்வேறு மொழி பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆகையால் அவர்களுக்கு என தனிப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.