சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய 'பிக்பாஸ் தமிழ் சீசன் 8' இன் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. யார் டைட்டில் வின்னராக ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வந்தார். இந்த சீசனில் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கினார். அதுமுதலே இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பும் ஆதரவும் பெருகிக்கொண்டே வந்தது.
இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா குப்தா, ஜெஃப்ரி, சஞ்சனா, அக்ஷிதா, அர்னவ், சத்யா மற்றும் தீபக் உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் முதல் நாளில் இருந்து போட்டியிட ஆரம்பிக்க, நிகழ்ச்சியின் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி, சிவா, வர்ஷினி, ரியா முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் போட்டியில் இணைந்தனர்.
#Day105 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil Season 8 #GrandFinale - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/f8Zn3Txws6
— Vijay Television (@vijaytelevision) January 19, 2025
ஆக மொத்தம் இந்த சீசனில் 24 பேர் கலந்து கொள்ள, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். போட்டி கடுமையாக கடுமையாக கடைசி வாரத்தில் ஆறு பேர் மட்டுமே போட்டியில் இருந்தனர். ஆனால் கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் வார இறுதிக்கு முன்பே ஜாக்குலின் எவிக்ஷனில் வெளியேறினார்.
மீதமிருக்கும் பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள். மொத்தமாக 105 நாட்களைக் கடந்துள்ள பிக் பாஸ் சீசன் 8இன் இறுதி வெற்றியாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த இறுதி நிகழ்ச்சி இன்று மாலை ஒளிபரப்பாக உள்ளது.
இதையும் படிங்க: "அவர் வந்தா தள்ளி போய்தான ஆகனும்".. ’விடாமுயற்சி’ வெளியாவதால் ’டிராகன்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதன்
ஆனால், இந்த இறுதி நிகழ்வின் படப்பிடிப்பு நேற்றே முடிந்துவிட்டதால், முத்துக்குமரன் வெற்றி பெற்றிருப்பதாக இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை வைத்து பலரும் முத்துக்குமரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று மாலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்வில்தான் பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யாரென அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.