தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - TVK MAANADU ACCIDENT
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/29-10-2024/640-480-22787303-thumbnail-16x9-a.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 29, 2024, 4:00 PM IST
|Updated : Oct 29, 2024, 4:09 PM IST
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்.27) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து புறப்பட்டு சென்றனர். இதில், சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர் ரியாஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்க்கு புறப்பட்டு சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சைதாப்பேட்டையிலிருந்து வந்த மணல் லாரி வலது புறமாக திரும்பியது. இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர்கள் உடனே வாகனத்தை நிறுத்த முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து லாரியில் சிக்கினர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமார் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரியாஸ் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள் லாரியில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளனர் போல் தெரிகிறது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து சாலையில் தேய்த்தபடியே சிறிது தூரம் சென்று லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.