வேலூரில் தூய்மைப்பணியாளரை இடித்து விட்டு அலட்சியமாக சென்ற நபர்..சிசிடிவி காட்சிகள் வைரல்! - man knocking the sanitation worker - MAN KNOCKING THE SANITATION WORKER
🎬 Watch Now: Feature Video
Published : May 8, 2024, 9:09 AM IST
வேலூர்: வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி மந்தவெளி தெரு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே பெண் ஒருவர் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அப்பெண் மீது மோதியதில் தூய்மைப்பணியாளர் விஜயலட்சுமி தூக்கி வீசப்பட்டார்.
இதனால், விஜயலட்சுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இது தொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகமாக மோதியதில், அந்தப் பெண்மணி தூக்கி வீசப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இடித்ததோடு மட்டுமில்லாமல் கீழே விழுந்த பெண்மணிக்கு என்ன ஆனது என்று கூட கண்டுகொள்ளாமல் அலட்சியமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனையடுத்து தூய்மைப்பணியாளர் கூச்சல் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து கால் முறிவு ஏற்பட்ட விஜயலட்சுமியை மீட்டு, முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணை இடித்துச் சென்ற நபரை வலைவீசித் தேடிவருகின்றனர்.