ஆம்பூர் அருகே நடந்த எருது விடும் விழா.. காளைகள் முட்டியதில் 5க்கும் மேற்பட்டோர் காயம்! - A Kaspa Road Bull race

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 7:31 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் மோகன் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். மேலும் இவ்விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.  

கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகே காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நொடிகளில் கடந்த காளையிற்கு முதற்பரிசாக ரூ.60 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரமும் என 40க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவினைக் காணச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.  

எருது விடும் விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கத் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்தனர். மேலும் இந்த எருது விடும் போட்டியில் பங்கேற்று ஓடிய காளைகள் முட்டியதில், விழாவினைக் காண வந்திருந்த 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த நபர்களுக்கு எருது விடும் விழாக் குழுவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும், 2 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.