பழனி முருகன் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை.. - Palani Murugan Temple - PALANI MURUGAN TEMPLE
🎬 Watch Now: Feature Video


Published : Apr 28, 2024, 11:02 PM IST
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று (ஏப்.28) பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்துடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
மேலும், அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாஜக நிர்வாகிகள் வரவேற்று, பழனி கோயிலில் உள்ள ரோப் கார் வழியாக மலைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர், தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்த பின்னர், மலைக் கோயிலில் அமைந்துள்ள போகர் சித்தர் சன்னதிக்குச் சென்ற அவர், தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் குடும்பத்துடன் தியானம் செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, கோயில் சார்பில் அண்ணாமலைக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனை அடுத்து மீண்டும், ரோப் கார் வழியாகவே மலைக் கோயிலில் இருந்து கீழே இறங்கிய அவர், கார் மூலமாகக் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் கோயிலில் இருந்த ஏராளமான பொதுமக்கள் அண்ணாமலைக்கு கைகொடுத்தும், அவருடன் புகைப்படமும் எனக்கொண்டனர்.