கஞ்சா போதையில் நடுரோட்டில் அமர்களம்... போலீசாரை வம்பிழுத்த ஆட்டோ ஓட்டுநர்! - Auto driver threatening police - AUTO DRIVER THREATENING POLICE
🎬 Watch Now: Feature Video
Published : May 17, 2024, 9:28 AM IST
சென்னை: எண்ணூர், ராமகிருஷ்ணா நகர் ஜங்ஷன் அருகே கஞ்சா போதையில் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த போக்குவரத்து காவலர், பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவை தூக்கி உள்ளனர். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அளவுக்கு அதிகமான போதைப் பொருட்களை உட்கொண்டதால் சுயநினைவில் இல்லாததால், அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்த போது இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் போலீசாரை மிரட்டும் தொனியில் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
மேலும் அந்தப் பகுதியில் கிடந்த ஓடு மூலம் காவலரை தாக்க முயற்சி செய்துள்ளார். போதையில் இருந்த ஆட்டோ ஒட்டுநர், அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி அடியில் தலையை வைத்து போலீசாரை மிரட்டும் தொனியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
செய்வது அறியாது திகைத்து நின்ற போலீசார், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு காட்டிய போதை ஆசாமியுடன் போராடினர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.