10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு அண்ணாமலை தொலைபேசியில் வாழ்த்து! - annamalai - ANNAMALAI
🎬 Watch Now: Feature Video
Published : May 11, 2024, 10:12 PM IST
திண்டுக்கல்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 625 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26 முதல் ஏப் 8ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதிக மதிப்பெண் எடுத்த ஒட்டன்சத்திரம் மாணவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டுபுதூரைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி - ரஞ்சிதா தம்பதி. இவர்களது மகள் காவியா ஸ்ரீ, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பள்ளி மாணவி காவியா ஸ்ரீ-ஐ ஒட்டன்சத்திரம் பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் தளபதி ரகுபதி மற்றும் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும், முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாணவி காவியா ஸ்ரீ-க்கு வாழ்த்து தெரிவித்தார்.