ஏரியில் நீர் குடிக்க வந்த யானை மின்சாரம் தாக்கி பலி! ஓசூர் அருகே சோகம் - Elephant died in Hosur

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 1:14 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அய்யூர் காப்புக்காட்டில் உள்ள யானைகள், வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக கூட்டம் கூட்டமாக அப்பகுதியில் உள்ள கிராமப்பகுதி விளைநிலங்களில் உணவுத் தேடிச் சென்று மீண்டும் காலை நேரங்களில் காட்டிற்கு திரும்புவது வாடிக்கையாக உள்ளது.

இதற்கிடையே நேற்றும் வழக்கம்போல, சந்தனப்பள்ளி பகுதியில் யானைக் கூட்டம் உணவு தேடிச் சென்றது. இந்த நிலையில், அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் குடிக்கச் சென்றபோது 10 வயது மதிக்கதக்க ஆண் யானை, மற்ற யானைகளைவிட சற்று உயரமாக இருந்த நிலையில், அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின்கம்பி உரசியதில் ஆண் யானை சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, தருமபுரி அருகே உள்ள கெலவள்ளி பகுதியில் உணவுத் தேடி வந்த ஆண் யானை ஒன்று இப்படி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்பகுதியில் அடிக்கடி குடிநீர், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக கிராமப்புறங்களுக்குள் படையெடுக்கும் யானைக் கூட்டங்கள் இதுபோல, மின்சாரம் தாக்கி உயிரிழப்பதைத் தடுக்க வனத்துறை, மின்சாரத்துறை அதிகாரிகள் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.